என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அனிஷா ஆம்ப்ரூஸ்
நீங்கள் தேடியது "அனிஷா ஆம்ப்ரூஸ்"
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை அனிஷா ஆம்ப்ரூசுக்கு ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. #AnishaAmbrose
‘வஞ்சகர் உலகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிஷா ஆம்ப்ரூஸ். தெலுங்கில் கோபாலா கோபாலா, ரன், மனமந்தா, உன்னாதி சிந்தகி, ஏ நாகரினிகி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
அனிஷாவும், தெலுங்கு நடிகர் ஒருவரும் காதலிப்பதாக பட உலகில் கிசுகிசுக்கள் பரவின. அதனை அவர் மறுத்துவந்தார். இந்த நிலையில், அனிஷாவுக்கும், குணா ஜக்கா என்பவருக்கும் திடீரென்று திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்துள்ளது.
இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் யாரையும் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு அனிஷா அழைக்கவில்லை. குணா சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. இவர்கள் திருமணம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
திருமணத்துக்கு பிறகு அனிஷா சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது சினிமாவை விட்டு விலகி விடுவாரா என்பது தெரியவில்லை. #AnishaAmbrose #GunaJakka
மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சிபி, சாந்தினி, அனிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் விமர்சனம். #VanjagarUlagamReview #GuruSomasundaram
கணவன், மனைவியான சாந்தினி - ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இடையே சரியான புரிதல் இல்லை. இவர்களது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார் நாயகன் சிபி சந்திரன். எப்போதும் குடி போதையிலேயே இருக்கும் சிபி பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறார்.
இந்த நிலையில் ஒருநாள், குடி போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் சிபியை போலீசார் எழுப்புகின்றனர். சாந்தினி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த கொலையில், சிபி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரை கைது செய்கின்றனர். இதையடுத்த சிபி பணிபுரியும் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரின் உதவியுடன் சிபியை வெளியே வருகிறார்.
இதையடுத்து இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் சிபி வேலை செய்யும் பத்திரிகை நிறுவனம் அந்த கொலை குறித்து துப்பு துலக்க ஆரம்பிக்கிறது. போலீசாரின் விசாரணையில் ஒரு தரப்பின் மீதும், பத்திரிகையாளர் விசாரணையில் வேறொரு தரப்பின் மீது சந்தேகம் ஏற்படுகிறது.
கடைசியில் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சிபி சந்திரனின் கதாபாத்திரமே வித்தியாசமானது. போதையுடன், எந்த விஷயத்தையும் கூலாக அணுகும் கதாபாத்திரத்தில் சிபி ஸ்கோர் செய்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். குரு சோமசுந்தரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்க்கிறார். இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் சாந்தினிக்கு இந்த படத்திலும் தீனிபோடும் கதாபாத்திரமே. அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். கொலை குற்றத்தை விசாரிக்கும் பத்திரிகையாராக அனிஷா ஆம்ப்ரூஸ் கவர்கிறார்.
மற்றபடி ஜான் விஜய், அழகம்பெருமாள், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், வாசு விக்ரம், விசாகன் வணங்காமுடி என மற்ற கதாபாத்திரங்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை கொடுத்துள்ளனர்.
மாறுபட்ட கோணத்திலும், முற்றிலும் புதுவிதமாக படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவும், இசையில் சிறப்பாக வந்திருந்தாலும், படத்துடன் நம்மால் பயணிக்க முடியாத சூழல் உருவாகிறது. முதல் பாதியிலேயே படம் முடிந்துவிட்டது போன்ற ஒரு எண்ணமும், சோர்வும் உருவாகிறது. படத்தின் நீளமும், காட்சியின் நீளமுமே அதற்கு காரணம் என்று கூறலாம். அதேபோல் காட்சிகளில் தொய்வு ஏற்படுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் இயக்குநர் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.
சாம்.சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. ரோட்ரிகோ டெல் ரியோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `வஞ்சகர் உலகம்' ரொம்ப நீளமானது. #VanjagarUlagamReview #GuruSomasundaram
மனோஜ் பீதா இயக்கத்தில் குரு சோமசந்தரம், சாந்தினி, அனிஷா ஆம்ரோஸ் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `வஞ்சகர் உலகம்' படத்தின் முன்னோட்டம். #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan
லைப்ரந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா பீதா தயாரித்துள்ள படம் வஞ்சகர் உலகம்.
புதுமுகம் சிபி நாயகனாகவும், அனிஷா ஆம்ப்ரோஸ் மற்றும் சாந்தினி தமிழரசன் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம் கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். ஹரேஷ் பெரடி, விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ராட்ரிகோ டெல் ரியோ, இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், படத்தொகுப்பு - ஆண்டனி எல்.ரூபன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், கலை இயக்குநர் - ஏ.ராஜேஷ், எழுத்து - மனோஜ் பீதா, விநாயக் வயாஸ், இயக்கம் - மனோஜ் பீதா.
இவர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பற்றி இயக்குநர் மனோஜ் பேசும் போது,
முதல் படமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான் த்ரில்லர் கதையில் படத்தை உருவாக்கி இருக்கிறேன். இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் கலந்த திரில்லர் படம். எனவே ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். மேற்கத்திய படமொன்றை பார்த்த அனுபவம் இருக்கும். விக்ரம் வேதா படத்திற்கு பிறகு சாம்.சி.எஸ்க்கு பேசும்படியான படமாக இது இருக்கும் என்றார்.
படம் வருகிற 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #VanjagarUlagam #GuruSomasundaram #ChandiniTamilarasan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X